புத்திசாலி சகோதரர்கள்
ராமுவும், சோமுவும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிற மாணவர்கள். இவர்களின் பெற்றோர் அந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார்கள். இருவரும் நல்ல புத்திசாலிகள். அவர்கள் அம்மாவுக்கு எல்லா உதவிகளும் செய்து நல்ல பிள்ளைகளாகவும் பெற்றோர் சொல் பேச்சு கேட்கும் குழந்தைகளாகவும் இருந்தனர். ராமுவும், சோமுவும் உள்ளுரில் உள்ள பள்ளியிலியே படித்து வந்தனர்.அவர்கள் படித்து வந்த பள்ளி அவர்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருந்தது.தினமும் நடந்தே பள்ளிக்கு சென்று மாலையில் பள்ளி விட்டவுடன் வீடு திரும்புவர். அவர்கள் படித்து வந்த பள்ளியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மதியம் மேல் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும். எல்லா வகுப்பு மாணவர்களும் ஒரு இடத்தில் கூடி பாட்டு, நடனம், நாடகம், எது வேண்டுமானாலும் நடத்தலாம். அப்படி கலைத்திறமையை காண்பிக்க போகும் குழந்தைகள், திங்கள் கிழமையே பேர் கொடுத்து விடவேண்டும். வெள்ளிக்கிழமை அவர்கள் பேரை கூப்பிட்டு அனைத்து ஆசிரியர்களும், எல்லா வகுப்பு மாணவர்களும் கூடி இருக்கும் இடத்தில் அவர்கள் செய்ய இருக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்திக்காட்ட வேண்டும்.அனைவரும்