2090 ல் ஒருநாள்
காற்று
வீசும் சத்தம் கூடக் கேட்கும். ஆனால் பள பள வென மின்னும் அந்தக் கார் வந்த
சத்தத்தை யாரும் கேட்கல. தெருவோட மூலையில் ஒரு வீட்டுக்கு முன்னாடி அந்தக்
கார் நிண்ணுச்சு. .
அவன்
காரிலிருந்தபடியே நிமிர்ந்த பார்த்தான். காரின் மேற்பகுதி தானாக
திறந்துகிச்சு.. அவன் எழுந்து நிண்ணான். அவனுக்குச் சுமார் இருபத்தைந்து
வயசு இருக்கும். அவனோட ஒடம்பில சில பகுதிகளிலிருந்து சில கம்பிகள்
நீட்டிக்கிட்டிருந்திச்சு. வேறு சில பகுதிகளில் சில மின்சார வயர்கள்
ஒட்டிக்கிட்டிருந்திச்சு.. தன் கையில் கிடந்த கடிகாரத்தில் இருந்த ஒரு
பொத்தானைப் பிடித்து அழுத்தினான். உடனே அவன் அணிந்திருந்த செருப்பில் சில
சிவப்பு விளக்குகள் மின்னிச்சு.
.
ரெண்டு
செருப்பிற்குள்ளிருந்தும் ரெண்டு சின்ன காத்தாடி வெளியே வந்து வேகமாகச்
சுத்திச்சு.. அவன் அப்படியே காத்திலெ மெல்ல மிதக்கத் தொடங்கினான். மிதந்து
மிதந்து மெல்ல மெல்ல வெளியே வந்து நின்னான்
தன்
கால்சராய்ப் பைக்குள் கையை விட்டு கைக்குட்டை மாதிரி இருந்த ஒரு பொருளை
வெளியே எடுத்தான். தன் கைக்கடிகாரத்தை அதுக்கு அருகே கொண்டுபோய் வேறொரு
பொத்தானை அழுத்தினான்.
கடிகாரத்திலிருந்து
புறப்பட்ட அகச் சிவப்புக் கதிர்கள் அந்தக் கைக்குட்டையில் விழுந்திச்சு.
அவ்வளவுதான் கைக்குட்டை இரண்டாகப் பிளந்திச்சு.. ரெண்டுபக்கமும் திரை
இருக்கற சிறு கணினியாக அந்தக் கைக்குட்டை மாறிச்சு.. "வருக வருக நானோ
உலகிற்கு வருக'' அப்படீங்கற வாக்கியம் திரையில் வந்து வந்து போச்சு.
உடலெங்கும்
கம்பிகளும் மின் கடத்திகளும் பொருத்தப்பட்டிருந்த அந்த இளைஞன் அந்த
கைக்குட்டைக் கணினியின் பல இடங்களில் மெல்ல மெல்லத் தொட்டான்.
அவ்வளவுதான்...
அப்பகுதியின் படம் முழுவதும் திரையில் தெரிந்திச்சு.. திரையில் தெரிந்த
வீடுகளில ஒரு வீட்டைத் தேர்ந்தெடுத்தான். அதன் வாசப்படியைத் தொட்டான்.
வாசப்படியில்
பொருத்தப் பட்டிருந்த பூட்டு பத்தின எல்லா தகவல்களும் திரையோட ஓர்
ஓரத்திலெ தெரிஞ்சிச்சு.. அதைத் தெட்டதும் வாசல் திறந்துகிச்சு..
அப்படி ஒவ்வொரு அறையாகத் திறந்து கடைசியிலெ பெரிய அலமாரியில் அவன் தேடி வந்த பொருள் இருப்பதை உறுதிப்படுத்திக்கிட்டான்.
அந்த வீட்டை நோக்க நடந்தவன். சட்டென ஞாபகம் வந்து திரும்பிப் பார்த்தான்.
அவனோட
காரை நோக்கிக் கையை நீட்டினான். கைக்கடிகாரத்திலிருந்து புறப்பட்ட புறஊதாக்
கதிர்கள் காரின் மேல் விழுந்திச்சு. அவ்வளவுதான் அப்படியொரு கார் அங்கே
நிக்கறத இப்போது யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி அது மறைஞ்சு போச்சு.
வாசலுக்கு
முன்னே சென்று தன் கைக்குட்டைக் கணினியில் தெரிந்த தகவல்படி சில இடங்களத்
தொட்டான். வீட்டுக்குள்ளே வாசலில் படுத்திருந்த யந்திரக் காவல் நாய் செத்து
விழுந்திச்சு.. அதற்கு உயிரளித்து வந்த மின்கலம் பழுதாகி கி கீ கி கீ.. என
ஈன சத்தத்தில் அழுதுகிட்டிருந்திச்சு.. அதைக் கண்ட அந்த இளைஞனின் இதழோரம்
மெல்லிய புன்னகை வந்து மறைஞ்சுது..
வாசற்கதவைத்
திறந்து வீட்டோட நுழைவாயிலுக்கு வந்தான். கைக்குட்டைக் கணினியில் அந்த
வீட்டு உரிமையாளரின் கண்கள் பெரிதாகி வந்து நிண்ணுச்சு..
அந்தக்
கண்களை கதவிடுக்கில் தெரிந்த புகைப்படக் கருவிக்கு நேராகக் காட்டினான்.
"விஷ்க்'' ங்ற சத்தத்தில் கதவு திறந்துகிச்சு. தானாகத் திறந்துகிட்ட கதவு
வழியாக அவன் அந்த வீட்டுக்குள் நுழைஞ்சான். கைக்குட்டைக் கணினி "பீப்
பீப்'' என அபாயக் குரல் எழுப்பும் போது நிண்ணான். நாலாபக்கமும் கண்களைச்
சுழல விட்டான். குறுக்கும் நெடுக்குமாக பாயும் அகச் சிவப்புக் கதிர்களை
அடையாளம் கண்டுகிட்டான். அதற்கு எதிராக புற ஊதாக் கதிர்களை பாய்ச்சினான்.
அந்த ஒரு நிமிடத்திற்குள் அவன் அதக் கடந்து அடுத்த அறைக்குள்ள நுழைஞ்சான்.
இப்படி ஒவ்வொரு அறையாகக் கடந்து உள்ளே நுழைஞ்சவனுக்கு முன்னாடி அந்த பெரிய அலமாரி தெரிந்திச்சு..
சுவரோடு
பொருத்தப்பட்டிருந்த அந்த அலமாரியைச் சுற்றி பெரிய பாதுகாப்பு வலையமே
இருப்பதைப் புரிஞ்சுகிட்டான். கைக்குட்டைக் கணியின் திரையில் தெரிஞ்ச பல
அடையாளங்களைத் தேடினான் பெருவிரல் அடையாளத்தில் தொட்டான்.
அந்த
அடையாளம் திரையெங்கும் விரிந்தது. திரையில சில முகங்கள் தெரிந்திச்சு.
அவங்கள்லெ ஒருத்தரோட முகத்தெ தொட்டான். அவரோட பெருவிரல் அடையாளம் திரையில்
வந்து நின்ணுச்சு. அந்த அடையாளத்தை அலமாரிக்குப் பக்கத்திலிருக்கிற
புகைப்படக் கருவியின் கண்ணுக்கு முன்னால் நீட்டினான். கருவியிலிருந்து சில
ஒளிக்கதிர்கள் திரையில் தெரிஞ்ச பெருவிரல் மீது விழுந்து மறைஞ்சுது. கொஞ்ச
நேரம் அமைதியாகத் தெரிஞ்ச அலமாரியோட கதவு தானா திறந்துகிச்சு.
"அப்பாடாணு
பெருமூச்சு விட்டான் அந்த இளைஞன் உள்ளே இருந்த பெரிய பூட்டுக்கு அருகே தன்
கைக்கடிகாரத்தைக் காட்டி சில பொத்தான்களை அழுத்தினான்.
கைக்கடிகாரத்திலிருந்து வெளிப்பட்ட கதிர்கள் பூட்டுக்குள் நுழைய
கடிகாரத்தில் தெரிஞ்ச எண்கள் அப்படியும் இப்படியும் நகர்ந்து ஒரு
குறிப்பிட்ட எண்ணை உருவாக்கிச்சு.
அடுத்து
அந்த எண்ணைத் தன் கைக்குட்டைக் கணினியில் அழுத்தினான். அவ்வளவு தான். அந்த
அலமாரியில் தெரிந்த பூட்டோட ரகசிய மொழி திரையில் தெரிந்திச்சு..
அந்த
மொழியை நல்லா கவனிச்ச அந்த இளைஞன் அத நாலஞ்சு தடவை மனசு க்குள்ளே சொல்லிப்
பார்த்துக்கிட்டான். அப்புறம் பூட்டில் தெரிந்த கணிப்பானில் அந்த
எண்களையும் எழுத்துக்களையும் அழுத்தினான்.
ஒரு நொடி
நேரம் காத்திருந்தான். அவன் கண் முன்னே கண்ணாடித் திரையொன்று உயர்ந்து
வந்திச்சு. அந்தத் திரையில் அலமாரிக்குள் இருக்கற பொருட்களும் அவற்றை
வெளியே எடுப்பதற்கான அடையாள எண்களும் தெரிந்திச்சு அதற்குள் தங்க நகைகள்
குவிஞ்சு கெடந்திச்சு. ஆனா அந்த இளைஞன் அத எடுக்கல. வங்கிகளிருந்து பணம்
எடுப்பதற்கான அட்டைகளையும் வேண்டாமென ஒதுக்கிட்டான். விலையுயர்ந்த வேறு பல
பொருட்களையும் வேண்டாம்ணு நீக்கிட்டான்.
கடைசியா
வீட்டுக்கு வெளியே இருந்து பார்த்த அந்தப் பொருளைத் தேர்ந்தெடுத்தான்.
அதற்கான அடையாள எண்ணையும் எழுத்துக்களையும் அழுத்தினான். அந்தப் பொருள்
நகர்ந்து வெளியே வருவதற்கு தகுந்தமாதிரி கண்ணாடித் திரை திறந்துகிச்சு.
.
அவன் அந்தப் பொருளை எடுக்கும்போது அவன் கை நடுங்குச்சு. அது ஒரு குப்பி. அந்தக் குப்பியைத் தன்னோடு கண்களில் வச்சு ஒத்திக்கிட்டான்.
மெல்ல அதன் மூடியைத் திறந்து. அதற்குள்ளிருந்த பொருளை வாயில் ஊத்தினான். ஒவ்வொரு துளியையும் ரசிச்சு ரசிச்சுச் சுவைச்சான்.
வீட்டுக்குள் நுழைஞ்ச மாதிரியே வெளியே வந்தான். கண்ணாடிச் சாலையில் அந்த கார் சத்தமில்லாம காத்தைக் கிழிச்சுகிட்டு பாஞ்சுது.
அடுத்த நாள்...
எல்லா
வீடுகளிலும் இருக்கற கணினிகளில் சிவப்பு விளக்கு விட்டு விட்டு
எரிஞ்சிச்சு.. ஒவ்வொருவரும் அந்தச் அவசரச் செய்தியை படிஞ்சாங்க. பெருமூச்சு
விட்டாங்க. நம்ம வீட்டிலெ நடக்கலெயணு சமாதானப்பட்டாங்க. .
கணினியின்
திரையில் தெரிஞ்ச செய்தி என்ன தெரியுமா? "சென்னையில் பத்து லட்சம் ரூபாய்
விலையுள்ள ஒரு குப்பித் தண்ணீர் திருட்டுப் போனது. இரண்டு மாதம் உயிர்
வாழ்வதற்கான அந்த ஜீவ அமுதத்தை உயர்ந்த ரகக் கணினியின் உதவியோடு யாரோ
திருடிச் சென்றுள்ளார்கள்'' அப்படிங்கறதுதான் அந்தச் சேதி.
நாம தண்ணீர வீணாக்கிட்டேயிருந்தா இன்னும் கொஞ்ச நாள்ல இந்த நெலம நமக்கும் வரலாம்.
Comments
Post a Comment