ஒரு குலைப்பழமும் ஒரு ரூபாயும்

தன்னோட வீட்டுக் கொல்லையில் சில வாழைக்கன்றுகளை நட்டிருந்தார் அழகப்பன். மலை வாழை, நேந்திரம், பாளையங்கோடன், பூவன்ணு பல்வகை வாழைக்கன்றுகளைப் பார்த்துப் பார்த்து வாங்கி நட்டிருந்தார்.. நீர்ப் பாய்ச்சுவார். தேவையான போது பச்சிலை உரமிடுவார். தன்னோட குழந்தைகளை போல் வாழைக்கன்றுகளையும் கவனிச்சு வந்தார்.. இவ்வளவு ஏன்? நாளும் வாழைகளுடன் பேசவும் செய்வார்.
அப்பா வாழைக் கன்றுகளை இந்த அளவுக்கு நேசிப்பது அவருடைய பிள்ளைகளான சுந்தருக்கும், சுந்தரிக்கும் தெரியும். அவரோட மனைவி அழகம்மாளுக்குத் தெரியும். கூடவே அழகம்மாளுக்கு வாழையிலையில் எத்தனை குலை வரும்? ஒரு குலையில் எத்தனை காய் காய்க்கும்? ஒரு பழத்திற்கு ஒரு ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு குலைக்கு எத்தனை ரூபாய் கிடைக்கும்? அப்படி பத்து குலைகள் கிடைத்தால் மொத்தம் எத்தனையாகும்? '' அப்படீண்ணு தன் புருஷன் இப்ப இருந்தே கணக்குப்போட தொடங்கிட்டாருங்கறதும் அழகம்மாளுக்குத் தெரியும்.
ஒரு நாள்....
" சுந்தர், சுந்தரி... ஓடி வாங்க...'' என்று அழகப்பன் கூப்பிடற சத்தம் கேட்டு இரண்டுபேரும் கொல்லைப் புறத்தை நோக்கி ஓடினாங்க. '' பாருங்க... நம்ம வாழை குலை தள்ளீருச்சு..'' அப்படீண்ணு சின்னக் குழந்தையைப் போலத் துள்ளினாரு அழகப்பன். "இன்னும் சில நாளில் இதிலிருந்து நிறைய காய் காய்க்கும். காய்கள் பழுக்கும். ஒரு பழத்திற்கு ஒரு ரூபாய்ண்ணு இந்தக் குலையை விற்க்கலாம். நமக்கு நிறையப் பணம் கிடைக்கும்'' என்று கண்னை பெரிதா விரிச்சபடி சொன்னாரு மலை வாழை ஒன்று நீளமாக குலை தள்ளியிருந்தது. நாளாக நாளாக சீப்புச் சீப்பாக காய்கள் வந்தது. காய்கள் காய்த்துப் பெரிதனது. சில சீப்புகளில் சில காய்கள் மெல்ல கனியத் தொடங்கியது. பச்சை நிறம் மெல்ல மஞ்சளாக மாறத் தொடங்கியது.அழகப்பன் கொடுவாளை எடுத்துக்கிட்டு கொல்லைப் புறத்துக்கு நடந்தார். கூடவே குழந்தைகளும் சேர்ந்து கொண்டார்கள். குழந்தைகள் பழக்குலையிலுள்ள பழத்தை ஆசையாகப் பார்த்தார்கள். ஆனால் அழகப்பன் அதைக் கண்டுக்கவேயில்லை.
குலையை வெட்டினார். ஒரு சாக்குப் பைக்குள் நுழைத்தார். வீட்டிக்குள் கொண்டுவந்து தொங்கவிட்டார். நாலைந்து நாட்கள் கழித்து. பழவாசம் மூக்கைத் துளைத்தது. சாக்குப் பையை மெல்ல நீக்கிப் பாத்தான் சுந்தர். சொல்லிவைத்த மாதிரி அத்தனை பழங்களும் மஞ்சள் நிறத்தில் தகதக என்று ஜொலிக்குது..
அவனோட வாயிலிலே கப்பலே விடலாம். அத்தனை எச்சில் ஊறியது. பழத்தைப் பறிக்க அவன் கையே நீண்டுது. ஆனால் அப்பா திட்டுவார் என்று நினைத்து கையைப் பின்னுக்கு இழுத்து கொண்டான்.. தன் தங்கச்சியையும் கூட்டி கொண்டு வந்து காட்டினான். ஊறி வந்த எச்சிலை விழுங்கறதைத் தவிர அவளுக்கும் வேறு வழியில்லையே.
அழகப்பன் குலையை விக்கறதுக்கு ஆளு தேடினார். ஒண்ணு இரண்டு பேரு வந்தாங்க. ஆனா அவங்க எல்லோரும் குறைஞ்ச விலைக்கு குலையைக் கேட்டாங்க. அழகப்பனோ.. குலையில் மொத்தம் நூற்றைம்பது பழங்கள் இருக்கு. நூற்றைம்பது பழத்துக்கு நூற்றைம்பது ரூபாய் தரணும்ணு கேட்டார். அதனால் வாங்க வந்தவர்களும் வாங்காம திரும்பிப் போனாங்க அழகப்பன் என்ன செய்யுறது என்று யோசித்தார். பழமோ நல்லா பழுக்கத் தொடங்கியது. அவர் மனத்தில் ஓர் யோசனை உதித்தது.
" அடுத்தவங்களுக்கு ஏன் விற்க்கனும்? நாமே வியாபாரம் செய்தால் என்ன? ''என்று நினைத்தார்.
" சுந்தர், சுந்தரி இங்கே வாங்க....'' என்று கூப்பிட்டார்.. ஒரு மூங்கில் கம்பை எடுத்தார் இரண்டு பேரோட தோள் மேல் வைத்தார். பழக்குலையை அந்த கம்போடு நடுவில் கட்டித் தொங்கவிட்டார்.
" பிள்ளைகளே..."பழம் பழம் என்று'' கூவிக்கிட்டே வீதி வீதியாகச் போங்க. நீங்கள் விற்பதை கேட்டு மக்கள் பழம் வாங்க வருவாங்க.. பழம் என்ன விலை என்று கேட்பாங்க. ஒரு பழம் ஒரு ரூபாய் என்று சொல்லுங்க. யாராவது குறைந்த விலைக்குக் கேட்டால் கொடுக்காதீர்கள் '' என்றார்.
பிள்ளகளும் சரி என்று சொல்லிவிட்டு பழக்குலையைச் சுமந்தபடி நடக்கத் தொடங்கினார்கள். "இருங்க இருங்க... இந்தா இந்த ஒரு ரூபாயை வைத்துக்கொள்ளுங்கள். யாராச்சும் இரண்டு ரூபாய் தந்துட்டு ஒரு பழம் வேணும் என்று கேட்டால் பாக்கி கொடுக்கணுமில்லையா'' என்று ஒரு ரூபாய் காசை சுந்தரோட சட்டைப் பைக்குள் போட்டார்.
பிள்ளைகள் இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். நிறைய வீடுகள் உள்ள தெருவைப் போய்ச் சேர்வதர்க்குள்ளே அவங்களுக்குப் போதும் போதும்ணு ஆயிவிட்டது.
"அண்ணா தோள் வலிக்குது..பசிக்கவும் செய்யுது.. இந்தப் பாலத்தில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துவிட்டு அப்புறம் போகலாம்ணு சொன்னாள் சுந்தரி.
"சரி, அப்படியே செய்யலாம்'' என்றான் சுந்தர். இரண்டு பேரும் பாலத்தில் உக்கார்ந்தாங்க. பழக்குலையிலுள்ள பழங்க சூரியவெளிச்சத்தில் தகதகண்ணு மின்னியது. இரண்டு பேரும் பழங்களை ஆசை ஆசையாகப் பார்த்தாங்க. ஆனால் சாப்பிட முடியாதே!
சட்டெனச் சட்டைப் பைக்குள் கையை விட்டான் சுந்தர். அதுக்குள்ளே இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்தான். "சுந்தரி, ஒரு பழம் என்ன விலை?'' என்று கேட்டான்.
" என்ன ஏன் கேட்கிறாய்? ஒரு பழம் ஒரு ரூபாய்ணு உனக்குத் தெரியாதா?''என்று சுந்தரி எதிர்க் கேள்வி கேட்டாள்.
"இந்தா ஒரு ரூபாய். ஒரு பழம் தா '' ஒரு ரூபாய் காசை நீட்டி கேட்டான் சுந்தர். சுந்தரி அந்த காசை வாங்கி கொண்டு ஒரு பழத்தைப் கொடுத்தாள். அவன் சாப்பிடறதையே பாத்தபடி உட்காந்திருந்தாள்..
அவன் சாப்பிட்டு முடிச்சதும் "இந்தா ஒரு ரூபாய். ஒரு பழம் கொடு'' அதே காசை சுந்தருக்கிட்ட நீட்டிகிட்டே கேட்டாள் சுந்தரி. காசை வாங்கி வச்சுகிட்டு பழத்தைப் பிச்சுக் கொடுத்தான் சுந்தர்.
இந்த விளையாட்டு நடந்துகிட்டே இருந்துதது. சாயங்காலமானது. இரண்டுபேரும் வீட்டுக்குப் புறப்பிட்டார்கள்.
பிள்ளைகள் வருகிற தூரத்திலிருந்தே பார்த்த அழகப்பன் ஓடோடி வந்தார். குலையில் ஒரு பழம் கூட இல்லாததைப் பாத்து ரொம்ப சந்தோஷமானார். சுந்தர் சட்டைப் பைக்குள் கையை விட்டான். அதே ஒரு ரூபாக் காசை அவருகிட்ட நீட்டினான்.
அழகப்பன் அப்படியே சிலை மாதிரி நின்னுட்டார்.
Comments
Post a Comment