Posts

Showing posts from June, 2018

கருணை கொண்ட உள்ளம், கடவுள் வாழும் இல்லம்

இக்கதை நிகழ்ந்த புலம் மாஸ்கோ. மார்டீன் ஒரு செம்மான், ஏழை. குறைந்த வருவாயில் வாழ்ந்து வருபவன். மனைவியின் தேவைக்காக ‘பர்’ கோட் ஒன்று வாங்க விழைந்து இயலாமையால், அதற்குப் போதிய பண வசதி(ரூபிள்) இன்மையால் கொஞ்சம் ரொட்டி வாங்கிக் கொண்டு விட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.      வழியில் இருந்த சர்ச் முற்றத்தின் ஊடாக நுழைந்து அந்தி மாலைப் பொழுதில் வந்து கொண்டிருந்த போது யாரோ முக்கி முனகும் சப்தம் கேட்டது. முகம் தெரியாதபடி பனி பெய்துகொண்டிருந்ததால் சற்று நெருங்கி அவன் சென்றுபார்த்தான்.      இளைஞன் ஒருவன் அரைகுறை உடையுடன் அங்கே விழுந்து பனியில் விரைத்துச் சுருண்டு கிடந்தான். இரக்கமும் கருணையும் மேலிட தன் மீது அணிந்து கொண்டிருந்த நீண்ட மேலங்கியைக் கழற்றி அந்த இளைஞனை அணைத்துத் தூக்கி அணிவித்து ஒரு வாடகை வண்டியில் ஏற்றித் தன்வீட்டிற்கு அழைத்து வந்தான்.      தன் குடும்பத்துக்கே பத்தாத நிலையில் வேற்றுநபர் ஒருவரை விருந்தாக அழைத்து வருவது என்ன விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவனுக்கு நன்கு தெரியும். மனைவியின் மன நிலையைப் பற்றியும் எதிர்வினைகள் பற்றியும் யோசித்தான்.