Posts

கருணை கொண்ட உள்ளம், கடவுள் வாழும் இல்லம்

இக்கதை நிகழ்ந்த புலம் மாஸ்கோ. மார்டீன் ஒரு செம்மான், ஏழை. குறைந்த வருவாயில் வாழ்ந்து வருபவன். மனைவியின் தேவைக்காக ‘பர்’ கோட் ஒன்று வாங்க விழைந்து இயலாமையால், அதற்குப் போதிய பண வசதி(ரூபிள்) இன்மையால் கொஞ்சம் ரொட்டி வாங்கிக் கொண்டு விட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.      வழியில் இருந்த சர்ச் முற்றத்தின் ஊடாக நுழைந்து அந்தி மாலைப் பொழுதில் வந்து கொண்டிருந்த போது யாரோ முக்கி முனகும் சப்தம் கேட்டது. முகம் தெரியாதபடி பனி பெய்துகொண்டிருந்ததால் சற்று நெருங்கி அவன் சென்றுபார்த்தான்.      இளைஞன் ஒருவன் அரைகுறை உடையுடன் அங்கே விழுந்து பனியில் விரைத்துச் சுருண்டு கிடந்தான். இரக்கமும் கருணையும் மேலிட தன் மீது அணிந்து கொண்டிருந்த நீண்ட மேலங்கியைக் கழற்றி அந்த இளைஞனை அணைத்துத் தூக்கி அணிவித்து ஒரு வாடகை வண்டியில் ஏற்றித் தன்வீட்டிற்கு அழைத்து வந்தான்.      தன் குடும்பத்துக்கே பத்தாத நிலையில் வேற்றுநபர் ஒருவரை விருந்தாக அழைத்து வருவது என்ன விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவனுக்கு நன்கு தெரியும். மனைவியின் மன நிலையைப் பற்றியும் எதிர்வினைகள் பற்றியும் யோசித்தான்.  

புத்திசாலி சகோதரர்கள்

Image
  ராமுவும், சோமுவும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிற மாணவர்கள். இவர்களின் பெற்றோர் அந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார்கள். இருவரும் நல்ல புத்திசாலிகள். அவர்கள் அம்மாவுக்கு எல்லா உதவிகளும் செய்து நல்ல பிள்ளைகளாகவும் பெற்றோர் சொல் பேச்சு கேட்கும் குழந்தைகளாகவும் இருந்தனர். ராமுவும், சோமுவும் உள்ளுரில் உள்ள பள்ளியிலியே படித்து வந்தனர்.அவர்கள் படித்து வந்த பள்ளி அவர்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருந்தது.தினமும் நடந்தே பள்ளிக்கு சென்று மாலையில் பள்ளி விட்டவுடன் வீடு திரும்புவர். அவர்கள் படித்து வந்த பள்ளியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மதியம் மேல் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும். எல்லா வகுப்பு மாணவர்களும் ஒரு இடத்தில் கூடி பாட்டு, நடனம், நாடகம், எது வேண்டுமானாலும் நடத்தலாம். அப்படி கலைத்திறமையை காண்பிக்க போகும் குழந்தைகள், திங்கள் கிழமையே பேர் கொடுத்து விடவேண்டும். வெள்ளிக்கிழமை அவர்கள் பேரை கூப்பிட்டு அனைத்து ஆசிரியர்களும், எல்லா வகுப்பு மாணவர்களும் கூடி இருக்கும் இடத்தில் அவர்கள் செய்ய இருக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்திக்காட்ட வேண்டும்.அனைவரும்

புத்தி சாதுர்யத்தால் சண்டையை சமாதானமாக்கியவன்

Image
  முன்னொரு காலத்தில் கந்தன் என்னும் ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் சிறிதளவே நிலம் இருந்தது, அதனையே உழுது பயிர் செய்து வாழ்ந்து வந்து கொண்டிருந்தான்.அவனுக்கு மனைவியும், குமரப்பன் என்ற மகனும் இருந்தான். இவர்கள் மூவரும் அவர்கள் நிலத்தை ஒட்டிய இடத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர். கந்தனும், அவன் மனைவியும் நல்ல உழைப்பாளிகள். குமரப்பன் புத்திசாலி குழந்தையாக இருந்த போதிலும்,கல்வி கற்க வைக்க இவர்களிடம் வசதி இல்லாததால் தினமும் விடியலில் மூவரும் எழுந்து பழையதை கரைத்து குடித்துவிட்டு, மிச்சத்தை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு  நிலத்திற்கு சென்று தோட்ட வேலைகளை பார்த்து விட்டு சூரியன் மங்கும் போதுதான் வீடு வந்து சேர்வர்.இப்படியே இவர்கள் காலம் ஓடி கொண்டிருந்த்து. குமரப்பன் வாலிப பருவத்தை அடைந்து விட்டான். அவனுக்கு ஒரு பெண் பார்த்து கல்யாணம் முடிக்க வேண்டும் என்று அவனின் பெற்றோர்கள் நினைத்தனர். ஆனால் படிப்பறிவோ, வசதியோ இல்லாத இவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள் என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்கள் நாட்டின் மீது அடுத்த நாட்டு அரசன் படையெடுத்து வந்து

திட்டமிட்டு வேலை செய்தால்

Image
துறையூர் என்னும் நாட்டை மகதவர்மன் என்னும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவனிடம் ஏராளமான படை வீரர்கள் இருந்தனர். அதற்காக மற்ற நாட்டுடன் போர் புரிய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அந்த படை வீரர்களைக்கொண்டு உள் நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தினான். இதன் மூலம் நாட்டில் திருட்டு,கொள்ளை போன்ற குற்றங்கள் இல்லாமல் இருந்தன.அதே போல் விவசாயம் செய்யும் நிலங்களை நன்செய்,புன்செய் என பிரித்து அதற்கேற்றவாறு வரி வசூல் செய்து அந்த வருவாய் மூலம் மற்ற காரியங்களுக்கு செலவுகள் செய்து நாட்டை வளமுடன் வைத்துக்கொண்டான். இவ்வாறு நல்ல முறையில் ஆட்சி செய்து கொண்டிருந்த மகதவர்மனுக்கு பெரிய சோதனை வந்தது, அந்த வருடம் நாட்டில் பெரும் பஞ்சம் தலை விரித்தாடியது. மழையே பெய்யவில்லை. இதனால் பயிர்கள் கருகி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடினர். மன்னனும் முடிந்தவரை சமாளித்து பார்த்தான். விவசாயம் நலிந்ததால்  வரி கட்ட முடியாமல் விவசாயிகள் தடுமாறினர். வரி கட்டாததால் நாட்டில் பண பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அனைவரும் மிகுந்த துனபம் அடைந்தனர். அப்பொழுது ஒரு துறவி அந்த நாட்டுக்கு வந்தார். மகதவர்மன்

குடியானவனின் யோசனை

Image
  முன்னொரு காலத்தில் ஒரு சிறு வயது குடியானவன் வாழ்ந்து வந்தான். அவன் கொஞ்சம் புத்திசாலி. அவன் வீட்டில் ஒரு பசு மாட்டை வளர்த்து வந்தான். அந்த பசு மாட்டில் பால் கறந்து வீடு வீடாய் சென்று பால் ஊற்றி தானியங்களை அதற்கு ஈடாக பெற்றுக்கொள்வான். சேகரித்த தானியங்களை கொண்டு போய் நகை கடைகளில் கொடுத்து நகைகளாக பெற்றுக்கொள்வான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை சேகரித்து ஒரு மண் சட்டிக்குள் வைத்து ஒரு இடத்தில் புதைத்து வைத்து விடுவான்.புதைத்து வைத்த இடத்தை அடையாளம் வைத்துக்கொள்ள செடி கொடிகளை நட்டு பெரிய காய்கறிகள் தோட்டம் போட்டு வைத்தான். அவன் சிறு வயது முதல் பால் ஊற்றி சம்பாதித்து பத்து வருடங்கள் கழித்து, அவனுக்கு திருமணம் செய்து கொள்ள ஆசை வந்தது. அப்பொழுதெல்லாம் திருமணத்துக்கு பெண்  வேண்டுமென்றால் பெண்ணின் பெற்றோர்களுக்கு நிறைய நகைகள் கொடுக்க வேண்டும். அவர்களும் பதிலுக்கு மாப்பிள்ளை என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறாரோ அதற்கு உதவி செய்வார்கள். இவனுக்கு, பெண்ணை பெற்றவர்கள் ஒரு பசு மாடு தருவதாக வாக்குறுதி கொடுத்தார்கள்.பெண்ணை பெற்றவர்கள் நாலு மைல் தள்ளி இருக்கிறார்கள். இவனும் ப

காட்டில் தேர்தலோ தேர்தல்

Image
  காட்டில் வசிக்கும் மிருகங்களுக்கு, அவர்கள் தலைவனாக ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடை பெற உள்ளது. ஜனாதிபதியான சிங்கம் முன்னிலையில் இந்த தேர்தல் நடை பெறும் என தேர்தல் குழு தலைவர் கரடியார் அறிவித்து விட்டார். யார் யார் போட்டியில் கலந்து கொள்கிறார்களோஅவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என கரடியார் தலைமையிலான தேர்தல் அலுவலகம் அறிவித்து விட்டது.புலியாரை நிற்க சொல்லி பூனைகள் இனத்தலைவர் வற்புறுத்தினார்.புலியார் மறுத்து விட்டார். என்னால் யாரிடமும் பேசிக்கொண்டிருக்க முடியாது, ஒரே அடியில் பிரச்சினையை முடித்து விடுவேன். அதனால் மற்ற மிருகங்கள் என்னிடம் பேச்சு வார்த்தைக்கு வர பயப்படும், ஆகவே நான் இந்த போட்டிக்கு வரவில்லை, என சொல்லி விட்டது.உடனே பூனைகள் இனத்தலைவர் தம் இனம் சார்பாக சிறுத்தையை நிற்க வைக்க்லாம் என முடிவு செய்து விட்டன.அதே போல் நாய்கள் இனத்தின் தலைவர் தம் இனத்தின் சார்பாக  "ஓநாயை" நிறுத்தலாம் என முடிவு செய்தன. ஓநாயும் சம்மதம் தெரிவித்து விட்டது. குதிரைகள் இனம் சார்பாக வரிக்குதிரையை நிற்க வைக்க அதன் தலைவர் கேட்டார். "வரிக்குதிரையார்" முதலில் மற

புலிக்கு புலி

Image
  புலியார் அன்று மகா கோபமாக இருந்தார். காலையில் அவர் கேட்ட செய்தி அவரை அவ்வளவு கோபப்பட வைத்து விட்டது. அதற்கு காரணம் நரியார் சொன்ன செய்திதான்.  விடிந்த பின் எழுந்த சூரியன் அப்பொழுதுதான் மேலேறிக்கொண்டிருந்தான். புலியார் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண்ணை மூடி குட்டி தூக்கம் போட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது மெதுவான காலடி ஒசை கேட்டது. என்னதான் தூக்க கலக்கத்தில் இருந்தாலும் புலியாரின் காதுகள் விருக்கென் விறைத்து காலடி சத்தத்தை உன்னிப்பாக கேட்டது. நடை பதுங்கி பதுங்கி நடப்பது போல காதுக்கு பட்டது. பட்டென கண்ணை விழித்து சற்று தொலைவில் நரியார் பதுங்கி பதுங்கி நடந்து கொண்டிருப்பதை பார்த்தது. என்ன நரியாரே சத்தமில்லாமல் போறீரு? இங்கே வாரும். ஒரே கேள்வி தான், நரியார் சப்த நாடியும் ஒடுங்கி, வாலை குலைத்து மெல்ல புலியார் அருகில வந்தது. ஐயா ஒண்ணுமில்லை, என்று மென்று முழுங்கியது.எங்கே போறீரு? கேட்ட புலியாருக்கு நம்ம காட்டுக்கு புதிசா புலியார் ஒருத்தர் வந்திருக்காரு, அவர் ஏதோ என்னை பாக்கணும்னு வர சொல்லியிருக்காரு. அதான் போய் பார்த்துட்டு வந்துடலாமுன்னு போயிட்டிருக்கேன். நல்ல தூக்க கலக்க